/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருட்கள் விற்றால் தகவல் அளிக்கலாம்: கலெக்டர்
/
போதை பொருட்கள் விற்றால் தகவல் அளிக்கலாம்: கலெக்டர்
போதை பொருட்கள் விற்றால் தகவல் அளிக்கலாம்: கலெக்டர்
போதை பொருட்கள் விற்றால் தகவல் அளிக்கலாம்: கலெக்டர்
ADDED : ஏப் 01, 2025 08:27 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக திகழ விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை, காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுதும் குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும். அண்டை மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து, போதை பொருட்கள் வருவதை சோதனை சாவடிகளில் கண்டறிந்து, பறிமுதல் செய்ய வேண்டும்.
புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் விற்பணை செய்வதை கண்டறியப்பட்டால், கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் போதை பொருட்கள் விற்றால், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்திலும், 94440 42322 என்ற 'வாட்ஸாப்' எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
மேலும், unavupukar@gmail.com என்ற 'இ - மெயில்' மற்றும் 'TN foodsafety consumer App' என்ற செயலியிலும் புகார் அளிக்கலாம். அவர்களின் தகவல் குறித்து ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

