/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை வளைவு தடுப்பு சுவரில் விபத்தை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்
/
சாலை வளைவு தடுப்பு சுவரில் விபத்தை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்
சாலை வளைவு தடுப்பு சுவரில் விபத்தை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்
சாலை வளைவு தடுப்பு சுவரில் விபத்தை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்
ADDED : மார் 12, 2024 09:38 PM

திருவள்ளூர்:ஈக்காடு சாலை வளைவில் ஏற்படும் விபத்துகளை தடுக்க, சாலை தடுப்பில் இரவில் ஒளிரும் பட்டை அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில், ஈக்காடு சி.எஸ்.ஐ., சர்ச் அருகில், அபாயகரமான சாலை வளைவு உள்ளது. சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் ஒரு அடி உயரம் மட்டுமே உள்ளது.
மேலும், இதற்கு அருகில், போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில், இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, இரவு நேரத்தில், வேகமாக வரும் கனரக வாகனங்களால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் சாலை வளைவில் உள்ள, தடுப்பு சுவற்றில், இரவில் ஒளிரும் பட்டை பொருத்தி உள்ளனர். இதனால், இரவு நேரத்தில், வேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு, சாலை தடுப்பு நன்றாக தெரியும் என்பதால், விபத்துகள் நடப்பது குறையும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.