/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரே ஆண்டில் ஒதப்பை பால சாலை மீண்டும் சேதம் பக்கவாட்டு சுவரிலும் வெடிப்பு
/
ஒரே ஆண்டில் ஒதப்பை பால சாலை மீண்டும் சேதம் பக்கவாட்டு சுவரிலும் வெடிப்பு
ஒரே ஆண்டில் ஒதப்பை பால சாலை மீண்டும் சேதம் பக்கவாட்டு சுவரிலும் வெடிப்பு
ஒரே ஆண்டில் ஒதப்பை பால சாலை மீண்டும் சேதம் பக்கவாட்டு சுவரிலும் வெடிப்பு
ADDED : டிச 15, 2024 12:02 AM

ஊத்துக்கோட்டை:சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி.
மழைக்காலங்களில் அதிகப்படியான உபரிநீரை வெளியேற்ற இங்கு, 16 மதகுகள் உள்ளன. இதன் வழியே உபரிநீர் திறந்து விடப்படும் போது, ஒதப்பை, ஆட்ரம்பாக்கம், சோமதேவன்பட்டு, தாமரைப்பாக்கம், ஜனப்பன்சத்திரம் வழியே எண்ணுார் பகுதியில் கடலில் கலக்கிறது.
இந்த வெள்ள நீர் செல்லும் போது, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலை மார்க்கத்தில், ஒதப்பை கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுகிறது. இதன்காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு, கொசஸ்தலை ஆற்றின் மேல், சாலையின் இடதுபுறம் 12.10 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துவங்கியது. 204 மீட்டர் நீளத்தில், 8 மீட்டர் அகலம் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல இரண்டு பக்கமும், 1.5 மீட்டர் அகலத்தில் பணிகள், 2023ம் ஆண்டு முடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.
பாலம் அமைத்து ஒராண்டில், ஆறு மாதத்திற்கு முன் பால சாலையில் சேதம் ஏற்பட்டது. நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து சீரமைக்கப்பட்டது. தற்போது பாலத்தின் மற்றொரு பகுதியில் சாலை சேதம் அடைந்து உள்ளது. பக்கவாட்டு சுவரிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.