ADDED : ஜன 31, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில், நெசவு தொழிலாளி பாலசுப்பிரமணியன், 43, கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், அவரது மனைவி புவனேஸ்வரி, 37, கள்ளக்காதலன் முத்து ஜெயம், 43, ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், பாலசுப்பிரமணியனை, ஏழு பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டி புதைத்தனர். ஏழு பேர் கும்பலில், மாநெல்லுார் இன்பராஜ், 23, பாதிரிவேடு ஹேமநாத், 24, என்.எஸ்.நகர்., சுரேந்தர், 23, ஆகிய மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களில், மாநெல்லுாரைச் சேர்ந்த அஜய் என்ற சக்திவேல், 23, நேற்று கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.