/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறக்காவல் நிலையத்திற்கு பூட்டு குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
/
புறக்காவல் நிலையத்திற்கு பூட்டு குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
புறக்காவல் நிலையத்திற்கு பூட்டு குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
புறக்காவல் நிலையத்திற்கு பூட்டு குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
ADDED : நவ 11, 2025 10:21 PM

பொதட்டூர்பேட்டை: புறக்காவல் நிலையம் பூட்டி கிடப்பதால், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம், ஓரிரு மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. பின், செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இந்நிலையில், அத்திமாஞ்சேரிபேட்டையில் வழிப்பறி, கொள்ளை, கொலை மிரட்டல், மாணவர்களுக்கு இடையே மோதல் என, தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். அத்திமாஞ்சேரிபேட்டை ஊராட்சி சார்பில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, கிராமம் முழுதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், குற்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
எனவே, பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், அத்திமாஞ்சேரிபேட்டை புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

