/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புயலால் சுற்றுச்சுவர் சேதம்: சீரமைப்பு பணி எப்போது?
/
புயலால் சுற்றுச்சுவர் சேதம்: சீரமைப்பு பணி எப்போது?
புயலால் சுற்றுச்சுவர் சேதம்: சீரமைப்பு பணி எப்போது?
புயலால் சுற்றுச்சுவர் சேதம்: சீரமைப்பு பணி எப்போது?
ADDED : நவ 11, 2025 10:20 PM

பொதட்டூர்பேட்டை: புயல் மழையால் பாதிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக சுற்றுச்சுவர், தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது.
பள்ளிப்பட்டு பகுதியில் சமீபத்தில் பெய்த, 'மோந்தா' புயலால் பலத்த மழை பெய்தது. இதில், பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அங்கிருந்த மரமும் வேரோடு சாலையில் சாய்ந்தது. சாலையில் சாய்ந்த மரம் உடனே வெட்டி அகற்றப்பட்டது.
ஆனால், புயல் மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் இடிபாடுகள், தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளன. இதனால், அலுவலகத்திற்கு வரும் பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு தினசரி பல்வேறு சான்று மற்றும் ஆவணங்கள் கேட்டு பலரும் வந்து செல்லும் நிலையில், நுழைவாயில் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பது அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, சுற்றுச்சுவர் இடிபாடுகளை விரைந்து அகற்றி, புதிதாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

