/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரிப்பு மருத்துவமனை 'விசிட்' அவசியம்
/
பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரிப்பு மருத்துவமனை 'விசிட்' அவசியம்
பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரிப்பு மருத்துவமனை 'விசிட்' அவசியம்
பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரிப்பு மருத்துவமனை 'விசிட்' அவசியம்
ADDED : ஜூன் 05, 2025 11:05 PM
திருவாலங்காடு:'போதை பழக்கங்கள் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா, தொழில்துறை செல்வது போன்று, மருத்துவமனைக்கு செல்வது கட்டாயம்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்டு திருத்தணி, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பொன்னேரி உட்பட ஒன்பது தாலுகாக்கள் உள்ளன. இங்கு, 2,300க்கும் மேற்பட்ட பள்ளி கல்லுாரிகள் உள்ளன. மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
புகை, மதுப்பழக்கம், பிற போதை பழக்கங்களில் சிக்கிய மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரத்யேகமாக கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'சுற்றுலா, தொழில்துறை செல்வது போன்று, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியது அவசியம்.
'அப்போது தான் அதன் பாதிப்பை மாணவர்களால் உணர்ந்து, நல்வழிப்படுத்த முடியும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் கூறியதாவது:
புகையிலை உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் வாயிலாக, அவர்களது இரண்டு மூன்று தலைமுறைகளை தாண்டியும் மரபணு வாயிலாக அதன் தாக்கம், பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு, அவர்கள் புகை பிடிக்கும் போது அருகில் இருப்பவர்களுக்கும் வரலாம். பொது வெளியில் புகை பிடிப்பதும், புகையிலை பொருட்களை விற்பதும், சட்டப்படி குற்றம்.
இதற்கு முன்பு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மத்தியில் புகை பழக்கம் இருந்த சூழல் மாறி, ஆறாம் வகுப்பு மாணவர்களே இப்பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.