/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனி தாசில்தார்களுக்கு வாகன வசதியில்லை: நலத்திட்ட உதவிகள் தாமதம்
/
தனி தாசில்தார்களுக்கு வாகன வசதியில்லை: நலத்திட்ட உதவிகள் தாமதம்
தனி தாசில்தார்களுக்கு வாகன வசதியில்லை: நலத்திட்ட உதவிகள் தாமதம்
தனி தாசில்தார்களுக்கு வாகன வசதியில்லை: நலத்திட்ட உதவிகள் தாமதம்
ADDED : செப் 27, 2025 11:10 PM
திருத்தணி;திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய மூன்று தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, தலா ஒரு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் பணிபுரிகின்றனர்.
இவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், விவசாய தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு, மாதாந்திர உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும், தனி தாசில்தார்கள், அரசு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு சென்றடைவதற்கு, அவ்வப்போது கிராமங்களில் முகாம் நடத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுதவிர, பயனாளிகள் தகுதியானவர்களாக என்ப தை ஆய்வு செய்வர்.
தனி தாசில்தார்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, மாவட்ட நிர்வாகம் வாகனம் வழங்கியது. இந்த வாகனங்கள் மூலம் எளிதாக தனி தாசில்தார்கள் ஆய்வு செய்வர். இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக தனி தாசில்தார்களுக்கு வாகன வசதியில்லை.
உதாரணமாக, திருத்தணி தாலுகா அலுவலகத்தில், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதன் எல்லை, குறைந்தபட்சம், 20 - 55 கி.மீ., உடையது. வாகன வசதியில்லாததால், பயனாளிகளிடம் ஆய்வு நடத்த முடியவில்லை. ஆண் தாசில்தார் பணியாற்றும் போது, இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு நடத்தி வந்தனர்.
தற்போது, பெண் தாசில்தார் பணிபுரிவதால், இருசக்கர வாகனத்தில் தனியாக செல்ல முடியாமல் தவித்து வருகிறார். எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, தனி தாசில்தார்களுக்கும் வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.