/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் இணைப்பு பகுதியில் சிறுபாலம் அமைக்க வலியுறுத்தல்
/
கால்வாய் இணைப்பு பகுதியில் சிறுபாலம் அமைக்க வலியுறுத்தல்
கால்வாய் இணைப்பு பகுதியில் சிறுபாலம் அமைக்க வலியுறுத்தல்
கால்வாய் இணைப்பு பகுதியில் சிறுபாலம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 01, 2024 07:44 AM

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சி பொம்மராஜுபுரம் கிராமத்தில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், பெருமாள் கோவில் தெரு மற்றும் சின்ன தெரு ஆகிய இரண்டு இடங்களில், ஒன்றிய பொது நிதி மற்றும் 15வது மாநில நிதிக்குழு 2024 - -25ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 11.25 லட்சம் ரூபாயில் கழிவுநீர் கால்வாய், கடந்த மாதம் அமைக்கப்பட்டது.
இந்த கால்வாய் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், முறையாக பணிகளை செய்யவில்லை என, கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது, பெருமாள் கோவில் தெரு மற்றும் சின்ன தெரு இணைக்கும் பகுதியில், கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை.
மேலும், கால்வாய் மீது சிமென்ட் சிலாப்கள் போடப்படவில்லை. இரண்டு கழிவுநீர் கால்வாய் இணையும் பகுதியில் சிறுபாலம் அமைக்காததால், அவ்வழியாக வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். மக்கள் நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, பொம்மராஜுபுரம் கிராமத்தினர் கூறியதாவது:
கழிவுநீர் கால்வாய் இணையும் பகுதியில் சிறுபாலம் அமைக்காமல், ஒப்பந்ததாரர் அலட்சியம் காட்டி வருகிறார். இதனால், சின்னதெரு, விநாயகர் கோவில் தெரு ஆகிய இடங்களுக்கு, மக்கள் கால்வாயை தாண்டி செல்ல வேண்டியிருந்தது.
இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்ததால், நேற்று முன்தினம் நாங்களே இரு பாறைகளை வைத்து, தற்காலிகமாக பாதை அமைத்து, நடந்தும், இரு சக்கர வாகனத்திலும், ஆபத்தான நிலையில் கடந்து செல்கிறோம்.
இணைப்பு சிறுபாலம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.