ADDED : மே 06, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு டி-2 காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக ராஜகோபால் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரியில், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று சென்றார். நான்கு மாதமாக இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில், திருவள்ளூர் காவலர் பயிற்சி மையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த நரேஷ் என்பவர், பதவி உயர்வு பெற்று நேற்று திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பெறுப்பேற்றுக் கொண்டார்.

