/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'இன்ஸ்டா' மோகம் மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது
/
'இன்ஸ்டா' மோகம் மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது
'இன்ஸ்டா' மோகம் மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது
'இன்ஸ்டா' மோகம் மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது
ADDED : ஜூன் 22, 2025 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.நகர் : கொருக்குப்பேட்டை, கண்ணகி நகர் முதல் தெருவைச் சேர்ந்த 22 வயது பெண், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம்'மில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இது, அவரது கணவர் சங்கர் என்பவருக்கு பிடிக்கவில்லை. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, குடிபோதையில் வீட்டிற்கு வந்த சங்கர், வீடியோ பதிவிடுவது குறித்து மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, சங்கரை கைது செய்தனர்.