/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆறுமுக சுவாமி கோவிலில் வள்ளி யானை சிலை பிரதிஷ்டை
/
ஆறுமுக சுவாமி கோவிலில் வள்ளி யானை சிலை பிரதிஷ்டை
ADDED : நவ 22, 2024 01:20 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் வள்ளி யானை இருந்தது. 2010ம் ஆண்டு வள்ளி யானை உடல்நலக்குறைவால் இறந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகம், இறந்த யானையை, திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள முருகன் கோவிலின் உபகோவிலான ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.
தொடர்ந்து இறந்த வள்ளி யானையின் நினைவாக மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டன.
யானை மண்டபம் 300 சதுரடியில் அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, வள்ளி யானை சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன் உள்பட பலர் பங்கேற்றனர்.