தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

 நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

 நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்


ADDED : பிப் 03, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில், 1.44 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடையை, சடலங்களை எரிக்க பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, பொன்னேரி நகராட் சிக்கு உட்பட்ட திருவாயற் பாடி கள்ளுக்கடைமேடு பகுதியில், 2022ல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.44 கோடி ரூபாயில், 2,800 சதுரடி பரப்பளவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு, 2024ல் பயனுக்கு வந்தது.

சமூக நல அறக்கட்டளை மூலம், எரிவாயு தகனமேடை பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இது, சரிவர பயன்பாட்டில் இல்லை என புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, இறந்தவர்களின் உடல்களை எரிக்க நவீன எரிவாயு தகனமேடையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் தனலட்சுமி கூறியதாவது:

கடந்தாண்டு ஜனவரி முதல் பயன்பாட்டில் உள்ள நவீன எரிவாயு தகனமேடையில், இதுவரை 25 சடலங்கள் எரியூட்டப்பட்டு உள்ளன. ஒரு சடலத்தை எரியூட்ட, 3,650 ரூபாய் என, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி பகுதியில், ஆறு இடங்களில் சுடுகாடுகள் உள்ளன. மக்கள் அவரவர் வழக்கப்படி சுடுகாடுகளை பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட சுடுகாடுகளில் சடலங்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us