/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

ADDED : மே 16, 2025 10:15 PM
பொன்னேரி:பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
இங்கு, இரண்டு சுழற்சிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது. சுழற்சி -1ல் இளநிலை தமிழ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர உயிரி தொழில்நுட்பவியல், கணிணி பயன்பாட்டியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சுழற்சி - 2-ல் இளநிலை வரலாறு, இயற்பியல், வேதியியல், தாவர உயிரி தொழில்நுட்பவியல், கணிணி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், இந்த கல்வியாண்டு முதல், புதிதாக சுழற்சி - 2-ல், தமிழ் வழியில் பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல் மற்றும் வணிக கூட்டுறவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டு உள்ளதால் அதற்கும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு, www.tngasa.in என்ற இணையதளத்தில், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கல்லுாரியில் அமைந்துள்ள உதவி மையத்தை அணுகி கூடுதல் விபரங்களை பெறலாம் என, கல்லுாரி முதல்வர் தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.