/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை புறவட்ட சாலை பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
சென்னை புறவட்ட சாலை பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
சென்னை புறவட்ட சாலை பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
சென்னை புறவட்ட சாலை பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2025 12:26 AM
திருவள்ளூர்:சென்னை புற வட்டச் சாலை பணிகளை விரைந்து முடிக்க, துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை குறைக்கும் வகையில், மாநிலத்தின் தெற்கு பகுதி மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு சென்றடைய, சென்னை புறவட்டச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, 133 கி.மீ., நீளத்தில் 16,212 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு வழி சாலை, இருபுறமும் இரு வழி சேவை சாலையுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
பணிகள், ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பணி நடைபெற்று வரும் பகுதிகளை கலெக்டர் பிரதாப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு, கீழானுார் பகுதியில் நடைபெற்று வரும் பணியை பார்வையிட்டு, ஒப்பந்ததாரர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
எல்லாபுரம் ஒன்றியம் அம்மனம்பாக்கம், சோழவரம் ஒன்றியம் தச்சூர் பகுதியில் சாலை மற்றும் மேம்பால பணிகளை பார்வையிட்டார்.
பின், எண்ணுார் துறைமுகம் முதல் தச்சூர் வரை நடைபெறும் சாலை பணி, மீஞ்சூர் மேல்மட்ட இணைப்பு பாலத்தை பார்வையிட்டார்.
பணிகளை விரைவாகவும், தரத்துடனும் நிறைவேற்ற அதிகாரிகளிடம் அறிவுரை வழங்கினார். நெடுஞ்சாலை துறை கோட்ட செயற்பொறியாளர்கள் கணேஷ், சங்கர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

