/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருட்களை கட்டுப்படுத்த வாகன சோதனை தீவிரம்
/
போதை பொருட்களை கட்டுப்படுத்த வாகன சோதனை தீவிரம்
ADDED : நவ 28, 2024 12:59 AM

திருவள்ளூர், நவ. 28-
'திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என எஸ்.பி., சீனிவாசபெருமாள் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தாள் தேர்வு செய்யப்பட்ட சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 5 இரண்டாம் நிலை காவலர்கள், 21 தமிழ்நாடு சிறப்பு காவலர்கள், 12 தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள், சிறைத் துறைக்கு 1 ஜெயில் வார்டன் என, மொத்தம் 39 பேர்களுக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி., சீனிவாச பெருமாள் வழங்கினார்.
பின் சீனிவாசபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் கடத்தலை தடுக்க தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கைது செய்யப்படுவர்களிடம் அவர்கள் எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என கேட்டு அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிகள் அருகே உள்ள வணிக நிறுவனங்களிலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் வாயிலாக தீவிர சோதனை மேற்கொள்ளும் பணியும் நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் முழுதும் 4,000 கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாகவும் அனைத்து காவல் நிலையங்களிலும் தலா ஆறு 'சிசிடிவி' கேமராக்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.