/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திமாஞ்சேரிபேட்டையில் மின்கம்பம் நடும் பணி தீவிரம்
/
அத்திமாஞ்சேரிபேட்டையில் மின்கம்பம் நடும் பணி தீவிரம்
அத்திமாஞ்சேரிபேட்டையில் மின்கம்பம் நடும் பணி தீவிரம்
அத்திமாஞ்சேரிபேட்டையில் மின்கம்பம் நடும் பணி தீவிரம்
ADDED : ஜன 04, 2025 01:26 AM

பள்ளிப்பட்டு:அத்திமாஞ்சேரிபேட்டை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நொச்சிலி பகுதியில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை அண்ணா நகர் வரையிலான சாலை விஸ்தரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பள்ளிப்பட்டில் இருந்து திருத்தணி செல்வதற்கான குறுக்கு வழியாக இந்த சாலை அமைந்துள்ளதால், ஏராளமான வாகன ஓட்டிகள், இந்த சாலை மார்க்கமாக பயணிக்கின்றனர்.
இந்த சாலை விஸ்தரிப்பு பணிக்காக, சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் இடம் மாற்றி நடப்பட்டு வருகின்றன. இதற்காக அத்திமாஞ்சேரிபேட்டை சுற்றுப்பகுதியில் நேற்று காலை மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
மின்கம்பங்களை நடும் பணியில், இயந்திரங்களின் உதவியுடன் மின்வாரிய பணியாளர்கள் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். மாலை 5:00 மணியவில் மின் வினியோகம் மீண்டும் துவங்கியது.