/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பறவை காய்ச்சல் எதிரொலி பொன்பாடியில் தீவிர சோதனை
/
பறவை காய்ச்சல் எதிரொலி பொன்பாடியில் தீவிர சோதனை
ADDED : மார் 19, 2024 08:49 PM

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களால் பறவை காய்ச்சல் வேகமாக பரவுகிறது.
இதை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில், கால்நடை துறையினர் முகாம் அமைத்துள்ளனர்.
இங்கு, 24 மணி நேரமும் கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் என, மூன்று ஷிப்ட் மூலம் முகாமில் தங்கியிருந்து, ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு வரும் வாகனங்களுக்கு நோய் தடுப்பு மருந்து தெளித்து வருகின்றனர்.
நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், வருவாய் கோட்டாட்சியர் தீபா ஆகியோர் பொன்பாடி சோதனை சாவடியில், பறவை காய்ச்சல் தடுக்கும் சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், வாகனங்களுக்கு நோய் தடுப்பு மருந்து தெளிப்பது குறித்து கேட்டறிந்தார்.

