/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி எல்லையில் தீவிர வாகன சோதனை
/
குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி எல்லையில் தீவிர வாகன சோதனை
குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி எல்லையில் தீவிர வாகன சோதனை
குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி எல்லையில் தீவிர வாகன சோதனை
ADDED : நவ 11, 2025 10:26 PM

கும்மிடிப்பூண்டி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழக எல்லையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்துடன், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில், தமிழக எல்லை துவங்கும் இடமான, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், மாநில எல்லையார ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. டில்லி செங்கோட்டை பகுதியில், நேற்று முன்தினம் கார் வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில், துப்பாக்கி ஏந்திய போலீசார், தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு, தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி, பயணம் செய்வோர் விபரங்களை சேகரித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
ரயில் நிலையம் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் இருப்புப்பாதை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், திருவள்ளூர் நகர போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

