/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் உபகோவில்களில் காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
/
திருத்தணி முருகன் உபகோவில்களில் காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
திருத்தணி முருகன் உபகோவில்களில் காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
திருத்தணி முருகன் உபகோவில்களில் காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
ADDED : பிப் 13, 2024 11:12 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள் என மொத்தம், 29 கோவில்கள் உள்ளன. இந்நிலையில், உபகோவில்களான திருத்தணி நரசிம்மசுவாமி கோவில், கரீம்பேடு நாததீஸ்வரர் கோவில்.
ஆற்காடுகுப்பம் சோளீஸ்வரர் கோவில் மற்றும் எஸ்.வி.ஜி.புரம் சந்தான வேணுகோபால சுவாமி ஆகிய நான்கு கோவில்களில் நான்கு அர்ச்சகர்கள், ஒரு பரிச்சாரகம் மடப்பள்ளியில் பிரசாதம் தயாரிப்பவர், ஒரு ஓதுவார் மற்றும் ஒரு நாதஸ்வர இசை ஆசிரியர் என மொத்தம், ஏழு காலிப்பணியிடங்கள் இருந்தன.
இதை நிரப்புவதற்கு திருத்தணி கோவில் நிர்வாகம் ஹிந்து அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவின் பேரில், விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இப்பணியிடங்களுக்கு, 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதிவாய்ந்த, 18 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேற்று நேர்முக தேர்வு திருத்தணி கோவில் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கோவில் அறங்காவல் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை- ஆணையர் ரமணி, இசைக் கல்லுாரி ஆசிரியர், ஆகம விதிகள் தெரிந்த அர்ச்சகர், மயிலாப்பூர் கோவில் ஓதுவார் ஆகியோர் முன்னிலையில், 18 பேரை அழைத்து நேர்முகத் தேர்வு நடந்தது. இதில் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணி ஆணைகள் வழங்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

