/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமையல் உதவியாளர் பணிக்கு இன்று நேர்காணல்
/
சமையல் உதவியாளர் பணிக்கு இன்று நேர்காணல்
ADDED : ஜூன் 12, 2025 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் செருக்கனுார், வீரகநல்லுார், கார்த்திகேயபுரம், பெரியகடம்பூர், அகூர், திருத்தணி நகராட்சி, சூர்யநகரம், முருக்கம்பட்டு மற்றும் அலுமேலுமங்காபுரம் ஆகிய ஊராட்சிகளில் இயங்கி வரும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 13 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களில் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு 234 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 127 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இன்று காலை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான நேர்காணல் நடைபெறுகிறது.