/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி சுகாதார நிலைய மாத்திரை கணக்கில் குளறுபடி: ஆய்வில் 'திடுக்'
/
பூண்டி சுகாதார நிலைய மாத்திரை கணக்கில் குளறுபடி: ஆய்வில் 'திடுக்'
பூண்டி சுகாதார நிலைய மாத்திரை கணக்கில் குளறுபடி: ஆய்வில் 'திடுக்'
பூண்டி சுகாதார நிலைய மாத்திரை கணக்கில் குளறுபடி: ஆய்வில் 'திடுக்'
ADDED : மார் 20, 2025 02:35 AM

ஊத்துக்கோட்டை:'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் வாயிலாக, நேற்று பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்ட கணக்குகளை ஆய்வு செய்தார்.
அதில், 2,000 மாத்திரைகள் கணக்கில் இருப்பதாக தெரிந்தது. ஆனால், மாத்திரை இருப்பு, 6,000க்கும் மேல் உள்ளது. இதையடுத்து, கலெக்டர் 'மாத்திரை பராமரிப்பில் ஏன் குளறுபடி' எனக் கேட்டதற்கு, சரியான பதில் இல்லாததால் அதிருப்தியுடன் சென்றார்.
ஒதப்பை மேம்பால பணி, அத்தங்கிகாவனுார் சாலை பணி, ஆத்துப்பாக்கம் நிழற்குடை, ஊத்துக்கோட்டை பாப்பான்குளம் ஆகிய இடங்களில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பின், போந்தவாக்கம் ஆறுவழிச் சாலை பணி, ஊத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து பகுதிவாசிகள், 'ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல், மாடுகள் உலா, மணல் லாரிகள் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்' என்றனர். இதற்கு கலெக்டர், 'சாலையில் திரியும் மாடுகள், பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக உடனடியாக பிடிக்கப்படும்.
மணல் லாரிகள், காலை 7:00 - 11:00 மணி, மாலை 4:00 - 6:00 மணி வரை ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்ல தடை விதிக்கப்படும். இதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுப்பர்.
மேலும், பஜார் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வோரிடம் பேசினார். அப்போது, 'போக்குவரத்திற்கு இடையூறு இன்றி கடைகள் நடத்த பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.