/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு
/
அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு
அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு
அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு
ADDED : செப் 06, 2025 11:49 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சான்றிதழ் படிப்பிற்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரியில், 2025- - 26ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
அனஸ்தீஷியா, ஆப்பரேஷன் தியேட்டர், டயாலிஸ், ஆர்த்தோபீடிக் டெக்னீஷியன் மற்றும் பன்முக மருத்துவ பணி ஆகிய பிரிவுகளில், 64 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் சேர விரும்புவோர், மருத்துவக் கல்லுாரியில், வரும் 8 - 12ம் தேதி வரை இலவசமாக விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை தேர்ச்சி பெற்ற, 17 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும் 17ம் தேதிக்குள், கல்லுாரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, gmcthiruvallur@gmail.com என்ற 'இ - மெயில்' மற்றும் 044 - 2766 5029 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.