/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல் குவாரி உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
கல் குவாரி உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஏப் 09, 2025 10:38 PM
திருவள்ளூர்:கல் மற்றும் கிரானைட் குவாரி உரிமம் பெற இனிமேல் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் சாதாரண கற்கள், கிரானைட் மற்றும் சிறு கனிமங்களின் குவாரி குத்தகை உரிமம் இணையவழியில் வழங்கும் முறை, இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோர், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணையதளமான https://mimas.tn.gov.inல் விண்ணப்பிக்க வேண்டும்.
பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதிவாய்ந்தோருக்கு குவாரி குத்தகை உரிமம் இணையத்தில் வழங்கப்படும். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில், இன்று முதல் குவாரி குத்தகை உரிமம் பெறுவதற்கான பழைய நடைமுறை கைவிடப்பட்டு, புதிய நடைமுறையான இணையவழியில் விண்ணப்பம் பெறும் வழி முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
எனவே, குவாரி உரிமையாளர்கள் குத்தகை உரிமம் பெற, இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.