/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரும் 4ல் செஸ் போட்டி :சிறுவர்களுக்கு அழைப்பு
/
வரும் 4ல் செஸ் போட்டி :சிறுவர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 01, 2024 11:41 PM
சென்னை:திருவள்ளூர் மாவட்ட சங்கம் சார்பில், மாவட்ட தேர்வு செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அயனம்பாக்கத்தில் உள்ள யூ.சி.சி.கே., மெட்ரிக் பள்ளியில் நாளை மறுநாள் நடக்கிறது.
இதில், 7, 11, 17 வயது பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. தவிர, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு என, தனியாக சாம்பியன்ஷிப் போட்டியும் நடக்கிறது.
போட்டியில், திருவள்ளூர் மாவட்ட வீரர் - வீராங்கனையர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டியில் தேர்வு செய்யப்படுவோர், அடுத்தடுத்த மாதங்களில் நடக்கும் மாநில போட்டியில், திருவள்ளூர் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகள், 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் நடக்கிறது.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், நாளை மாலைக்குள் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 98848 54008, 99414 90200 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

