/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு 15க்குள் பதிவு செய்ய அழைப்பு
/
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு 15க்குள் பதிவு செய்ய அழைப்பு
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு 15க்குள் பதிவு செய்ய அழைப்பு
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு 15க்குள் பதிவு செய்ய அழைப்பு
ADDED : அக் 31, 2025 07:46 PM
திருவள்ளூர்: சம்பா பருவத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு, விவசாயிகள் வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 730 வருவாய் கிராமங்களில், நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்து, மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு இழப்பீட்டு தொகை பெற முடியும்.
நவம்பர் மாதத்தில் பருவ மழைபொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற் பயிரில் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுசெய்யும் பொருட்டு, நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்.,' என்ற நிறுவனத்தில், வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்.
சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் 'இ-- சேவை மையத்தில்' ஒரு ஏக்கருக்கு 545 ரூபாய் மட்டும் செலுத்தி, காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதியில் உள்ள, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

