/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கைம்பெண் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
/
கைம்பெண் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
ADDED : நவ 27, 2024 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட அளவில், விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய இ--சேவை மையம் அல்லது www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.