/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுக்கூடமாக மாறி வரும் இரும்பு நடைமேம்பாலம்
/
மதுக்கூடமாக மாறி வரும் இரும்பு நடைமேம்பாலம்
ADDED : மே 10, 2025 02:46 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில், சாலையின் குறுக்கே இரும்பு நடை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த நடை மேம்பாலம் வழியாக தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இரவு நேரத்தில், இந்த நடை மேம்பாலத்தை மர்மநபர்கள் சிலர், 'குடி'மையமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் படிகளில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, நடை மேம்பாலத்தின் படிகளில் காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன.கவரைப்பேட்டை போலீசார், இந்த நடை மேம்பாலத்தை இரவு நேரத்தில் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.