/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருளஞ்சேரி சுடுகாடு புதர் அகற்றி சீரமைப்பு
/
இருளஞ்சேரி சுடுகாடு புதர் அகற்றி சீரமைப்பு
ADDED : பிப் 01, 2025 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது இருளஞ்சேரி. இப்பகுதியில் இறந்தவர்கள் உடலை அடக்கம் மற்றும் எரியூட்டுவதற்காக, கூவம் ஆற்றின் கரையோரம் சுடுகாடு அமைந்துள்ளது.
இதில், இறந்தவர்களின் உடலை எரியூட்டும் பகுதியில், முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி இருந்தது.
அதனால், இறந்தவர்களின் உடலை எரியூட்ட முடியாமல், அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின்படி, சுடுகாடு பகுதியில் வளர்ந்திருந்த முட்புதர்களை, ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றி சீரமைத்தனர்.