sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீர் சேமிப்பு ... தெரிந்துதான் நடக்குதா?: மாநகராட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக புகார்

/

ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீர் சேமிப்பு ... தெரிந்துதான் நடக்குதா?: மாநகராட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக புகார்

ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீர் சேமிப்பு ... தெரிந்துதான் நடக்குதா?: மாநகராட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக புகார்

ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீர் சேமிப்பு ... தெரிந்துதான் நடக்குதா?: மாநகராட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக புகார்


ADDED : அக் 30, 2025 12:10 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரிடர் மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றாமல், குடிநீர் ஏரிகளில் கூடுதல் நீரை, நீர்வளத்துறை சேமித்துள்ளதால், 2015ல் நடந்தது போல் சென்னைக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆபத்தை உணராமல், மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், நீர் வளத்துறையினர் செயல்படுவதாக, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இவை மொத்தம், 11.75 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. தற்போது, இவற்றில் 9.27 டி.எம்.சி., இருப்பு உள்ளது.

அதன்படி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 2.94 டி.எம்.சி.,யும், 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2.76 டி.எம்.சி.,யும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், 3.23 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 2.38 டி.எம்.சி.,யும், 1.08 டி.எம்.சி., கொண்ட சோழவரம் ஏரியில் 0.78 டி.எம்.சி.,யும், 0.50 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட தேர்வாய் கண்டிகை ஏரியில், 0.44 டி.எம்.சி., இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள நீரை வைத்து, அடுத்தாண்டு வடகிழக்கு பருவமழை வரை, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

வடகிழக்கு பருவமழை நேரத்தில், குடிநீர் ஏரிகளில் பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நீர்வள ஆணையம், அணைகள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை வெளியிட்டுள்ளன.

அதன்படி, வடகிழக்கு பருவமழை நேரத்தில், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில், முழு கொள்ளளவில் இருந்து தலா, 1 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பை காலியாக வைக்க வேண்டும்.

சோழவரம், தேர்வாய்கண்டிகை ஏரிகளில், மொத்த கொள்ளளவில் 25 சதவீதம் வரை நீர் இருப்பை காலியாக வைக்க வேண்டும். அப்போதுதான், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 20 செ.மீ.,க்கு மேல் மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தாலும், ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

கரைகள், ஷட்டர்கள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை தவிர்த்து, ஏரிகளின் கீழ்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆனால், பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்றாமல், புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில், அதிக அளவில் நீர் சேமிக்கப்பட்டு உள்ளது.

கனமழை கொட்டும்பட்சத்தில், அதிகப்படியான நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றினால், செம்பரம்பாக்கம் ஏரியால், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளச்சேத சம்பவங்கள் மீண்டும் நிகழும் ஆபத்து உள்ளது.

இதனால், சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆனால், இந்த விதிமுறையை நீர்வளத்துறை முறையாக கடைபிடிக்கவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

'வருவாய்' குறைவை போக்க நீர்வளத்துறை ரகசிய திட்டமா?


இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: சென்னை மண்டல நீர்வளத்துறை பராமரிப்பில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, வெள்ளாறு உள்ளிட்ட பிரதான ஆறுகள் உள்ளன. இதுமட்டுமின்றி, சென்னையில் அரும்பாக்கம் - விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட பிரதான நீர்வழித்தடங்களும் இருந்தன. இந்த கால்வாய்கள் சீரமைப்பு பணிக்கு, பல கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடுகளை தயாரித்து, நிதித்துறையின் ஒப்புதலையும் நீர்வளத்துறையினர் பெற்றிருந்தனர். நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டு கால்வாய்களும், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் அரசால் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதனால், நீர்வளத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய வருவாயை, நகராட்சி நிர்வாகத்துறையினர் தட்டிப்பறித்துள்ளனர். இந்த கோபத்தில் உள்ள நீர்வளத்துறையினர், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், நீர்வளத்துறை ஏரிகளில் அதிகளவு உபரிநீர் திறந்தால், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் வழியாக சென்னையில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும். மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாடம் கற்றுத்தர, இந்த ரகசிய திட்டத்தை சென்னை மண்டல நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவின்படி, பொறியாளர்கள் கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.



- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us