/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலைகளை நாசமாக்க அனுமதிக்கலாமா முதல்வரே?
/
சாலைகளை நாசமாக்க அனுமதிக்கலாமா முதல்வரே?
ADDED : பிப் 08, 2025 01:41 AM

ஆவடி:மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் இன்று நடக்கிறது. இதில், ஆவடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்நிலையில், முதல்வரை வரவேற்கும் விதமாக, அமைச்சர் நாசர் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையோரங்களில் பள்ளம் தோண்டி, ராட்சத கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
மேலும், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோருக்கு ராட்சத 'கட் அவுட்' உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன், தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி, தி.மு.க., நிகழ்ச்சிகளின்போது, 'பேனர், கட் அவுட்' வைக்க கூடாது என தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இருப்பினும், தங்கள் 'கெத்து' காட்ட வேண்டும் நினைக்கு பகுதி தி.மு.க.,வினர், நன்றாக இருக்கும் சாலையை, சேதமடைய செய்யும் வகையில் பள்ளம் தோண்டி கம்பங்கள் அமைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த கம்பங்கள் உயிர்பலி வாங்கு வகையில் உள்ளன. கட்சியினரின் இந்த முறையற்ற நடவடிக்கைக்கு, முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.