/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரத்தன் டாடா பிறந்த நாள் நன்கொடை தினமாகுதா?
/
ரத்தன் டாடா பிறந்த நாள் நன்கொடை தினமாகுதா?
ADDED : அக் 11, 2025 12:28 AM

பொன்னேரி:'மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்தநாளை, தேசிய நன்கொடை தினமாக அறிவிக்க வேண்டும்' என, மத்திய இணை அமைச்சர் முருகனிடம், கல்லுாரி மாணவர் அமைப்பு கோரிக்கை வைத்தது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில், நேற்று பா.ஜ., நிர்வாகியின் கடை திறப்பு விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் முருகன் பங்கேற்றார்.
பின், அங்கு வந்திருந்த பொன்னேரி, ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பிறந்த நாளான, டிச., 28ம் தேதியை, தேசிய நன்கொடை தினமாக அறிவிக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பான பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர். அவர்களிடம், 'உங்கள் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்' என, அமைச்சர் முருகன் உறுதியளித்தார்.