/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டில் கனமழை மூழ்கியது தரைப்பாலம்
/
பள்ளிப்பட்டில் கனமழை மூழ்கியது தரைப்பாலம்
ADDED : அக் 11, 2025 12:30 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், சாமந்தவாடா தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
பள்ளிப்பட்டு பகுதியில், நேற்று முன்தினம் 7 செ.மீ., மழை பெய்தது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. இதில், சாமந்தவாடா மற்றும் ஞானம்மாள்பட்டடை இடையே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
சாமந்தவாடாவில் இருந்து தரைப்பாலத்தை கடந்து, பள்ளிப்பட்டு செல்லும் வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், இக்கிராமத்தினர் புண்ணியம் வழியாக, 4 கி.மீ., சுற்றிக் கொண்டு பள்ளிப்பட்டு சென்று வருகின்றனர்.
சமீபத்தில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரும், கொசஸ் தலையில் பெருக்கெடுத்து பாய்ந்த போது, சாமந்தவாடா தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
தொடர்ந்து வெள்ளத்தின் சீற்றத்தை எதிர்கொள்ளும் இந்த தரைப்பாலம், தற்காலிகமாக மணல் மூட்டைகளால் சீரமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.