/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
/
முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகன் கோவிலில் கிருத்திகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : அக் 11, 2025 12:31 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத கிருத்திகையை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். பின், தேர்வீதியில் வீதியுலா வந்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.
பள்ளிப்பட்டு: நெல்லிக்குன்றம் சுப்ரமணி சுவாமி கோவிலில், காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உத்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமான், மலைக்கோவிலில் உள்புறப் பாடு எழுந்தருளினார். அதேபோல், நெடியம் செங்கல்வராய சுவாமி கோவில், கரிக்கல் குமரேசகிரி முருகர் கோவில்களிலும் நேற்று கிருத்திகை உத்சவம் விமரிசையாக நடந்தது.
வல்லக்கோட்டை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை நடந்தது.
காலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.