/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிக்கடி மூடப்படும் முதல்வர் மருந்தகம் மருந்துகள் பற்றாக்குறை காரணமா?
/
அடிக்கடி மூடப்படும் முதல்வர் மருந்தகம் மருந்துகள் பற்றாக்குறை காரணமா?
அடிக்கடி மூடப்படும் முதல்வர் மருந்தகம் மருந்துகள் பற்றாக்குறை காரணமா?
அடிக்கடி மூடப்படும் முதல்வர் மருந்தகம் மருந்துகள் பற்றாக்குறை காரணமா?
ADDED : மே 12, 2025 11:27 PM

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டத்தில், தொழில் முனைவோருக்கு - 15, கூட்டுறவு சங்கங்களுக்கு - 18 என, 33 மருந்தகங்கள், கடந்த பிப்., 24ம் தேதி தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறக்கப்பட்டது.
மாவட்டத்தில் பொன்னேரி வட்டம் -- 3, கும்மிடிப்பூண்டி -- 3, திருவள்ளூர் -- 12, ஆவடி -- 4, ஊத்துக்கோட்டை -- 2, பூந்தமல்லி -- 3, திருத்தணி -- 4, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் தலா, 1 என, 33 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதால், நோயாளிகள் அதிக விலை கொடுத்து மற்ற தனியார் மருந்து கடைகளில் வாங்கும் நிலை ஏற்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தரமான மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதே இந்த மருந்தகத்தின் நோக்கம். ஒவ்வொரு மருந்தகத்திலும் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டது. அதில், பெரும்பகுதி ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்கள் சார்ந்ததாகவே உள்ளது.
குழந்தைகளுக்கான திரவ மருந்துகள் குறைவாக உள்ளது. மொத்தமுள்ள, 200க்கும் மேற்பட்ட வகை மருந்துகளில், 20 - 30 சதவீத மருந்துகளே இருப்பில் உள்ளது.
இதனால், மருந்து மாத்திரைகளை வாங்க வருவோர் அவதியடைகின்றனர். ஒரு சில மருந்துகளை முதல்வர் மருந்தகத்திலும், மற்றவை தனியார் மருந்தகத்திலும் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், திருவாலங்காடு பகுதியில் உள்ள முதல்வர் மருந்தகம் அடிக்கடி மூடப்படுவதாகவும், அதற்கு மருந்துகள் இல்லாததும், பற்றாக்குறையுமே காரணம் என, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

