/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை வழங்கல்
/
விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை வழங்கல்
ADDED : டிச 05, 2024 11:23 PM

திருத்தணி,
திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில், உலக மண் தினத்தையொட்டி திருத்தணி வேளாண் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு மண் பரிசோதனை குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இதில், திருத்தணி வேளாண் உதவி இயக்குநர் பிரேம் பங்கேற்று, விவசாயிகள் மண் பராமரிப்பது எப்படி, நிலத்திற்கு உயிர் உரங்கள் எவை, பயிரிடுவதற்கு முன் மண் பரிசோதனை முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார்.
தொடர்ந்து, விவசாயிகள் கேட்கும் சந்தேகங்களுக்கு உதவி இயக்குநர் பிரேம், செயல்முறை விளக்கத்துடன் பதில்கூறினார்.
தொடர்ந்து, 60 விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை மற்றும் உயிர் உரங்கள், வேளாண் துறையின் சார்பில் வழங்கப்பட்டன.