/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆடி கிருத்திகைக்கு அன்னதானம் அனுமதி பெறுவது கட்டாயம்
/
ஆடி கிருத்திகைக்கு அன்னதானம் அனுமதி பெறுவது கட்டாயம்
ஆடி கிருத்திகைக்கு அன்னதானம் அனுமதி பெறுவது கட்டாயம்
ஆடி கிருத்திகைக்கு அன்னதானம் அனுமதி பெறுவது கட்டாயம்
ADDED : ஆக 04, 2025 11:02 PM
திருவள்ளூர்,திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை திருவிழாவில் அன்னதானம் செய்வோர், கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை, தெப்ப திருவிழா வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில், 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி கிருத்திகை திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர் மற்றும் நிறுவனங்கள், www.foscos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
அன்னதானம் வழங்க விரும்புவோர், வரும் 13ம் தேதிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது. நோய் தொற்று உள்ளவர்களை, அன்னதான உணவு சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்கக்கூடாது.
போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தொடர்புக்கு, 94892 79217, 95787 26302 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.