/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிரம்பி வழியும் சீமாவரம் அணைக்கட்டு கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க திட்டமிடல் அவசியம்
/
நிரம்பி வழியும் சீமாவரம் அணைக்கட்டு கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க திட்டமிடல் அவசியம்
நிரம்பி வழியும் சீமாவரம் அணைக்கட்டு கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க திட்டமிடல் அவசியம்
நிரம்பி வழியும் சீமாவரம் அணைக்கட்டு கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க திட்டமிடல் அவசியம்
ADDED : பிப் 09, 2025 12:25 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு அமைந்து உள்ளது. அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை துவங்கிய நாள்முதல், கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக இருந்தது.
நவம்பர் இறுதியிலும், டிசம்பர் துவக்கத்திலும் பெய்த கன மழை, சோழவரம் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் ஆகியவற்றின் காரணமாக, ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால், வல்லுார் அணைக்கட்டு, கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்தில் நிரம்பியது. அதிலிருந்து தொடர்ந்து, மூன்று மாதங்களாக அணைக்கட்டில் இருந்து, உபரிநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
தற்போதைய நிலையில், வினாடிக்கு, 1,200 கனஅடி உபரிநீர் வெளியேறி, சுப்பாரெட்டிப்பாளையம், நாப்பாளையம் வழியாக எண்ணுார் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்கு பருவமழையின்போது, 15 - 20 டி.எம்.சி., மழைநீர் கடலில் கலக்கிறது. இதை சேமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சீமாவரம் அணைக்கட்டில் இருந்து, கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்க, ஆங்காங்கே தடுப்பணைகள் ஏற்படுத்த வேண்டும்.
ஆற்றின் அருகில் உள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தி, அவற்றில் கடலுக்கு சென்று வீணாகும் மழைநீரில் ஒரு பகுதியை சேமிக்கலாம். எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொணடு, மழைநீரை சேமிப்பதற்கான திட்டமிடல்களில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.