/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு! வேளாண் அலுவலகம் கட்டும் பணி எப்போது?
/
ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு! வேளாண் அலுவலகம் கட்டும் பணி எப்போது?
ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு! வேளாண் அலுவலகம் கட்டும் பணி எப்போது?
ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு! வேளாண் அலுவலகம் கட்டும் பணி எப்போது?
ADDED : மார் 29, 2025 02:30 AM
திருவாலங்காடு:திருவாலங்காடு வட்டார வேளாண் அலுவலகத்திற்க்கு உட்பட்டு கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, திருவாலங்காடு, மணவூர் உட்பட நான்கு குறுவட்டங்களில் 42 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில், 50,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.
தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பூ வகைகளும் குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுகின்றன. விவசாயிகள், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை வாங்க, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் அருகே செயல்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடம் சேதமடைந்து காணப்பட்டதால், அவை இடிக்கப்பட்டு, கடந்தாண்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையமாக உயர்த்தி புதிய கட்டடம் கட்ட முடிவானது.
இதையடுத்து, தற்காலிகமாக ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், திருவாலங்காடில் பழையனூர் செல்லும் சாலையில் வாடகை கட்டடத்தில், ஆறு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு, இடநெருக்கடி உள்ளதாக வேளாண் அலுவலக ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் வேளாண் அலுவலகம் இருக்கும் இடத்தை அறியாமல் அலைந்து திரிந்து வந்து செல்லும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் கட்டும் பணியை விரைந்து வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.