/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி மிரட்டிய மூவருக்கு சிறை
/
கத்தியை காட்டி மிரட்டிய மூவருக்கு சிறை
ADDED : செப் 22, 2024 07:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் கர்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது போளிவாக்கம் சத்திரம் பகுதியில் சி.சி.ஐ. தனியார் தொழிற்சாலை அருகே மூன்று நபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.
அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் போளிவாக்கம் உதயா, 25, மணவாளநகர் சரண், 19, தலக்காஞ்சேரி சந்தானம், 27 என தெரிந்தது.
இவர் கத்தியை காட்டி அவ்வழியாக வருபவர்களிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரிந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்து மணவாளநகர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.