/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பண்ணுார் குடியிருப்பு பகுதியில் 3 மாதத்தில் ஜல்லி பெயர்ந்த சாலை
/
பண்ணுார் குடியிருப்பு பகுதியில் 3 மாதத்தில் ஜல்லி பெயர்ந்த சாலை
பண்ணுார் குடியிருப்பு பகுதியில் 3 மாதத்தில் ஜல்லி பெயர்ந்த சாலை
பண்ணுார் குடியிருப்பு பகுதியில் 3 மாதத்தில் ஜல்லி பெயர்ந்த சாலை
ADDED : பிப் 17, 2025 11:17 PM

பண்ணுார்,கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார். இங்குள்ள 8வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின்படி, மூன்று மாதத்திற்கு முன், இப்பகுதியில் அன்னாள் தெரு முதல், சிறுமலர் இருளர் குடியிருப்பு வரை, 230 மீட்டர் நீளமுள்ள சாலை, 7 லட்சம் ரூபாயில் தார் சாலையாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த தார் சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து, தார் ஊற்றிய சுவடே தெரியாமல் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதற்கு ஒன்றிய அதிகாரிகள் சாலை சீரமைப்பின் போது ஆய்வு செய்யாததே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், பண்ணுார் பகுதியில் ஆய்வு செய்து, மூன்றே மாதத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.