/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் 20ல் ஜமாபந்தி துவக்கம்
/
திருவள்ளூர் மாவட்டத்தில் 20ல் ஜமாபந்தி துவக்கம்
ADDED : மே 15, 2025 06:55 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 9 வட்டங்களிலும், வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வரும் 20ம் தேதி முதல் துவங்குகிறது.
திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடப்பு ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் 'ஜமாபந்தி' வரும் 20ம் தேதி துவங்கி ஜூன் 10 வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து வேலை நாட்களில் நடைபெறும்.
இதில், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும், பொதுமக்களின் குறைகளை களையவும் ஜமாபந்தி அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பொதுமக்கள் முன்னதாகவே தங்களது குறைகளை மனுக்கள்
மூலம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜமாபந்தி நடைபெறும் இடங்கள்
வட்டம்- வருவாய் தீர்வாய அலுவலர்- நடைபெறும் நாள்
திருத்தணி - மு. பிரதாப், கலெக்டர், திருவள்ளூர்- 9 நாட்கள் மே 20-ஜூன் 3 வரை.
ஊத்துக்கோட்டை - ராஜ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர், திருவள்ளூர்- 7 நாட்கள் மே 20-29 வரை.
கும்மிடிப்பூண்டி- ரவிகுமார், சப் கலெக்டர், பொன்னேரி- 7 நாட்கள் மே 20-29 வரை.
பூந்தமல்லி- ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ., திருவள்ளூர்- 6 நாட்கள் மே 20-28 வரை.
ஆர்.கே.பேட்டை- கனிமொழி, ஆர்.டி.ஓ., திருத்தணி- 5 நாட்கள் மே 20-27 வரை.
ஆவடி- பாலமுருகன், தனித்துணை கலெக்டர், திருவள்ளூர்- 5 நாட்கள் மே 20-27 வரை.
பொன்னேரி- கணேஷ், உதவிஆணையர் (கலால்), திருவள்ளூர்- 13 நாட்கள் மே 20- ஜூன் 10 வரை.
பள்ளிப்பட்டு- உஷாராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்,திருவள்ளூர்- 4 நாட்கள் மே 20-23 வரை.
திருவள்ளூர்- ஸ்ரீராம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), திருவள்ளூர்- 12 நாட்கள் மே 20-ஜூன் 6 வரை.