/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பு கடைகளால் புட்லுார் சாலையில் நெரிசல்
/
ஆக்கிரமிப்பு கடைகளால் புட்லுார் சாலையில் நெரிசல்
ADDED : பிப் 19, 2025 01:53 AM

புட்லுார்:புட்லுார் - ராமாபுரம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திருவள்ளூர் வட்டம், புட்லுார்- ராமாபுரம் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலானோர், ரயில் மார்க்கமாக புட்லுார் வருகின்றனர். பின் அவர்கள் அங்கிருந்து ராமாபுரம் சாலை வழியாக கோவிலுக்குச் செல்கின்றனர்.
இந்த நிலையில், அந்த சாலையின் இருபுறமும், உள்ளூர் மக்கள் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, சாலையோர ஆக்கிரமிப்பினை உள்ளாட்சி அமைப்பு மற்றும் போலீசார் அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.