/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை விரைவில் சீரமைப்பு: எம்.பி., உறுதி
/
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை விரைவில் சீரமைப்பு: எம்.பி., உறுதி
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை விரைவில் சீரமைப்பு: எம்.பி., உறுதி
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை விரைவில் சீரமைப்பு: எம்.பி., உறுதி
ADDED : ஜன 16, 2025 08:18 PM
ஊத்துக்கோட்டை:ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை இடையே, 31 கி.மீட்டர் துார சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், மூன்று ஆண்டுகளாக உள்ளது. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் செல்கின்றன.
தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலை குண்டும், குழியுமாக உள்ளன. மரண பள்ளங்கள் நிறைந்த இச்சாலையில், இரவு நேரங்களில் தினமும் விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனிடையே, வெங்கல் ஊராட்சியில், பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறியும் நிகழ்ச்சி, எல்லாபுரம் தெற்கு காங்., தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடந்தது.
இதில், திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் பங்கேற்று, பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அப்போது ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், தினமும் விபத்து ஏற்படுகிறது. அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எம்.பி., விரைவில் ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை இடையே பழுதடைந்த சாலை, அதிகாரிகளுடன் கலந்துரையாடி சீரமைக்கப்படும் என, உறுதிபட தெரிவித்தார்.