/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணி உலர்த்த சென்ற நேரத்தில் நகை 'அபேஸ்'
/
துணி உலர்த்த சென்ற நேரத்தில் நகை 'அபேஸ்'
ADDED : டிச 19, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி,
கவரைப்பேட்டை, சண்முகா நகரில் முதல்தள வீட்டில் குடும்பத்துடன் வசிப்பவர் ரமேஷ், 56; ரமேஷ் வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி சுஜாதா, வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
முன் கதவு திறந்திருந்த நிலையில், மொட்டை மாடியில் துணி காய வைக்க சென்று, சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இடைப்பட்ட நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, மேஜையில் வைத்திருந்த, நான்கரை சவரன் தங்க செயினை திருடிச் சென்றுள்ளனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.