/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சத்துணவு உதவியாளர் வீட்டில் நகை திருட்டு
/
சத்துணவு உதவியாளர் வீட்டில் நகை திருட்டு
ADDED : செப் 17, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சத்துணவு உதவியாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 6.5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே நெல்லிமரத்துக்கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ஹேமலதா, 39. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்ற பின், மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6.5 சவரன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.