/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் நகை திருட்டு
/
பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் நகை திருட்டு
ADDED : ஜூலை 07, 2025 11:13 PM
ஆர்.கே.பேட்டை, பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணிடம், நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்தவர் ரேவதி, 30. இவர், நேற்று மாமியார் சாரதா என்பவருடன், ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். ரேவதியின் தந்தை ரவி, இவர்களை அம்மையார்குப்பத்தில் உள்ள நகைக்கடைக்கு அழைத்து சென்றார்.
அங்கு, 2.5 சவரன் நகை வாங்கி கொடுத்தார். நகையுடன் நகரி செல்வதற்காக, ஆர்.கே.பேட்டை பேருந்து நிலையத்தில் ரேவதியும், சாரதாவும் காத்திருந்தனர். பள்ளிப்பட்டு செல்லும் தடம் எண்: 'டி47' என்ற அரசு பேருந்தில் ஏறினார்.
அப்போது, சாரதா வைத்திருந்த பை கிழிக்கப்பட்டு, நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பேருந்தில் ஏறும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடப்பட்டது தெரியவந்தது. ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.