/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதுகாப்பின்றி அமைக்கப்பட்ட தொட்டி

ADDED : ஏப் 13, 2025 02:37 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, சாமந்தவாடா வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. இதில், கரையோர கிராமங்கள் நீர்வளத்தால் செழிப்பாக உள்ளன.
கொசஸ்தலை ஆற்றில் இருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, குழாய் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில சாலையின் ஓரமாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களுக்கு இடையே, ஆங்காங்கே சிறிய கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் தரைமட்டத்தில் அமைந்துள்ளன.
திறந்தநிலையில் எந்தவித பாதுகாப்பு தடுப்பும், எச்சரிக்கை பதாகையும் இன்றி இருக்கும் இந்த தொட்டிகளால், வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.