/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
/
கடம்பத்துார் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
கடம்பத்துார் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
கடம்பத்துார் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
ADDED : ஆக 07, 2025 02:20 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி பகுதியில், நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், பட்டா கேட்டு நரசிங்கபுரம் கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி ஊராட்சியில், தனியார் திருமண மண்டத்தில் இருளஞ்சேரி, நரசிங்கபுரம், கொண்டஞ்சேரி, காவாங்கொளத்துார், சத்தரை ஆகிய, ஐந்து ஊராட்சிப் பகுதிவாசிகளுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவுந்தரி, நடராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
அப்போது, நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதி திராவிட பகுதிவாசிகள், தங்களுக்கு கடந்த 1968, 1987, 1994, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாக்களை கிராம வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென கூறி, முகாமில் இருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், எங்களது பட்டாவை வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்யாவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி, முகாமை விட்டு வெளியேறினர்.
தகவலறந்த திருவள்ளூர் பொறுப்பு - தாசில்தார் பரமசிவன், அதிகாரிகள் மற்றும் மப்பேடு சாலை மறியலில் ஈடுபட முயன்ற அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர்.
அப்போது, பட்டாக்களை வருவாய் கணக்கில் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த முகாமில், 461 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட, 1,476 மனுக்கள் பெறப்பட்டன.
பின் முகாமிற்கு வந்த திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜந்திரன், அதிகாரிகளிடம் வருவாய் கணக்கில் பட்டாக்களை பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவிட்டார்.