/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் வரும் 22ல் கந்த சஷ்டி துவக்கம்
/
திருத்தணி முருகன் கோவிலில் வரும் 22ல் கந்த சஷ்டி துவக்கம்
திருத்தணி முருகன் கோவிலில் வரும் 22ல் கந்த சஷ்டி துவக்கம்
திருத்தணி முருகன் கோவிலில் வரும் 22ல் கந்த சஷ்டி துவக்கம்
ADDED : அக் 17, 2025 10:21 PM
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும் 22ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கி, ஆறு நாட்கள் நடக்கிறது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் முதல் கந்த சஷ்டி விழா, ஆறு நாட்கள் நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி விழா, வரும் 22ம் தேதி துவங்குகிறது.
அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கும். காலை 8:30 மணிக்கு உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பின், உற்சவர் சண்முகருக்கு, காலை 8:00 - இரவு 8:00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும். வரும் 22ம் தேதி தங்கக்கவசம், 23ம் தேதி திருவாபரணம், 24ம் தேதி வெள்ளி கவசம், 25ம் தேதி சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முக பெருமானுக்கு, வரும் 26ம் தேதி மாலை புஷ்பாஞ்சலியும், 27ம் தேதி உற்சவர் சண்முகருக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது.